என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று சென்னை தெற்கு இணை காவல் ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
ரவுடி சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இல்லை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் :
ரவுடி சீசிங் ராஜாவை நேற்று (22-09-24) தாம்பரம் போலீசார் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர். அதன் பிறகு பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்ற சீசிங் ராஜாவை போலீசார் அழைத்துச் சென்ற போது அவர் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி சீசிங் ராஜா பலியானார். rowdy seizing raja has nothing to do with Armstrong murder
இதனையடுத்து சென்னையில் காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி மற்றும் சீசிங் ராஜா ஆகிய மூன்று பேர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்மந்தமில்லை :
இதனை தொடர்ந்து தெற்கு இணை காவல் ஆணையர் சிபி சக்கரவர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்த போது அவர் சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக ஏற்கெனவே நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்.
அத்துடன் 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் சீசிங் ராஜா மீது பிடி வாரண்ட் நிலுவையில் உள்ளது. மேலும் சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை.
வேளச்சேரி பார் ஊழியரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் சீசிங் ராஜாவை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது அவரை ஆந்திராவில் வைத்து கைது செய்தோம்.
குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !
மேலும் இந்த வழக்கில் துப்பாக்கியை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்ற போது சீசிங் ராஜா, போலீசாரை நோக்கி சுட்டார். இதனால் தற்காப்புக்காக போலீசார் அவரை சுட்டதில் ரவுடி சீசிங் ராஜா உயிரிழந்துள்ளார். நாங்கள் விசாரிக்கவே கைது செய்தோம். ஆனால் அவர் தாக்கியதால் தான் என்கவுன்டர் சூழல் உருவானது என்று கூறியுள்ளார்.