Home » செய்திகள் » Goan Classic 350 புதிய ராயல் என்ஃபீல்டு அறிமுகம் – விலை எவ்வளவு தெரியுமா?

Goan Classic 350 புதிய ராயல் என்ஃபீல்டு அறிமுகம் – விலை எவ்வளவு தெரியுமா?

Goan Classic 350 புதிய ராயல் என்ஃபீல்டு அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Goan Classic 350 புதிய ராயல் என்ஃபீல்டு அறிமுகம்: உலகில் எத்தனையோ ரக பைக்குகள் இருந்தாலும் கூட பெரும்பாலான மக்களுக்கு ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் மீது தான் அதிக நாட்டம் இருந்து வருகிறது. எப்படியாவது வாங்க வேண்டும் என்று பலரும் போராடி வருகின்றனர். மேலும் ராயல் என்ஃபீல்டு 1949 முதல் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து மக்களை கவரும் விதமாக புதிய அட்வான்ஸ் கொண்ட பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பாபர் ஸ்டைல் பைக்கான கோவான் கிளாஸிக் 650-ஐ (Goan Classic 350) என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். இதில் ரெடரோ-ஸ்டைல் வட்ட வடிவ LED முகப்பு விளக்கு, டியர் டிராப் வடிவ எரிபொருள் டேங்க், டிஜி அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

மேலும் இதுவரை வெளியாகாத நிறங்களில் புது நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட உயரம் அதிகமாக இருக்கும் நிலையில், வெள்ளை நிறத்தைக் கொண்ட டயர்களும் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த புது பைக்கில் 349 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு J சீரிஸ் இன்ஜினையே கொடுத்துள்ளனர். மேலும் இந்த கிளாஸிக் 350 பைக்கானது ரூ.1.93 லட்சம் முதல் ரூ. 2.30 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. நவம்பர் 23ம் தேதியன்று புதிய கோவான் கிளாஸிக் பைக்கை வெளியிட இருக்கிறது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

இன்றைய தங்கம் விலை நிலவரம் (21.11.2024) ! மீண்டும் எகிறிய கோல்ட் ரேட் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை 2024! 38 மாவட்டங்களின் லிஸ்ட்

தஞ்சை ஆசிரியை கொலை – மல்லிப்பட்டினம் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை

Jaguar நிறுவனத்தின் பிரபலமான லோகோ மாற்றம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top