
ராயல் என்ஃபீல்டு Guerrilla 450: இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இருசக்கர வாகனம் என்றால் அது ராயல் என்ஃபீல்டு தான். ராயல் என்பீல்டு நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக தொடர்ந்து பல மாடல்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய மாடல் ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது Royal Enfield Guerrilla 450 என்ற புதிய பைக்கை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இந்த பைக்கின் ஆரம்ப விலை 2.4 லட்சமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் விரைவில் ஷோரூமில் விற்கப்படுகிறது. இதனால் ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் கடும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். மேலும் கடந்த 15 ஆண்டுகளில் இந்நிறுவனம் இந்தியா தவிர்த்து, பிரேசில், அர்ஜென்டினா, கொலம்பியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆலைகளை திறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.