இராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் பிஹைண்ட் அண்ட் பியோன்ட் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
RRR படம்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் தான் இராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த எல்லா திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக பாகுபலி திரைப்படம் அவருடைய சினிமா கெரியரை மேலோங்கி கொண்டு போனது என்று கூட சொல்லலாம். இப்படம் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி வசூல் செய்தது. அப்படத்திற்கு பிறகு வெளியான பாகுபலி 2 திரைப்படமும் ஆயிரம் கோடி வசூல் செய்திருந்தது.
ஆர்ஆர்ஆர்: பிஹைண்ட் அண்ட் பியோன்ட்.., ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படமும் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. பல விருதுகளை வென்ற இந்த திரைப்படத்தில், என்.டி.ராமராவ் ஜூனியர், ராம் சரண், ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. மேலும் இதில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை வென்றது.
பிக்பாஸில் சாதனை படைத்த ஜாக்குலின்.., BB வரலாற்றில் இதுவே முதல் முறை!!
அதுமட்டுமின்றி தெலுங்கில், சிறந்த இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட 7 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்நிலையில் திரைப்படம் உருவான விதத்தை படக்குழு ஆவணப்படுத்தியுள்ளனர். இது குறித்து சமீபத்தில் டிரெய்லர் வெளியாகி வைரலானது. மேலும் இந்த ஆவண படத்திற்கு ‘ஆர்.ஆர்.ஆர்: பிஹைண்ட் அண்ட் பியோன்ட்’ என தலைப்பிட்டுள்ளனர். மேலும் இந்த ஆவணப்படம் கடந்த 20-ம் தேதி சில திரையரங்குகளில் மட்டும் வெளியானது. இந்நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்: பிஹைண்ட் அண்ட் பியோன்ட்’ வருகிற 27-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
விரைவில் சூரிய வம்சம் பார்ட் 2.., சரத்குமார் சொன்ன குட் நியூஸ்.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!
விடாமுயற்சி படத்தின் புக்கிங் தொடங்கியது.., எங்கு தெரியுமா?.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!
டைவர்ஸ் வாங்கிய பிரபல சீரியல் நட்சத்திர ஜோடி.., அதிர்ச்சியில் சின்னத்திரை!!
அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன்?…, 22 வருடங்களாக விடாமல் துரத்தும் பகை!