Education Scholarship 2024: ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை வேண்டுமா? அப்ப உடனே இதை செய்யுங்கள்!Education Scholarship 2024: ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை வேண்டுமா? அப்ப உடனே இதை செய்யுங்கள்!

தமிழக மாணவர்களே Education Scholarship 2024: ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை வேண்டுமா: தமிழகத்தில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்காக அரசு பல்வேறு உதவி தொகைகளை வழங்கி வருகிறது. அதே போல் அறக்கட்டளை நடத்தி வருபவர்களும் அவ்வப்போது ஏழ்மை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில்  2024-2025 கல்வி ஆண்டுக்கான உதவித்தொகைகளை கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை வழங்க உள்ளது. படிப்பில் சிறந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

மேலும் இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வருகிற ஜூலை 31 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, மொத்தத்தில் ரூ.12 லட்சம் பெறுமானம் உள்ள உதவித் தொகைகள் கிடைக்கும்.

அதுவும் விண்ணப்பிக்கும் மாணவர்களின்  தகுதிக்கு ஏற்ப பகிர்ந்து அளிக்கப்படும் என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சில நிபந்தனைகளும் வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில பின்வருமாறு,

  • நடப்பாண்டில் அரசு அங்கீகாரம்‌ பெற்றுள்ள கல்வி நிலையத்தில்‌படித்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ்‌ (Bonafide Certificate) வைத்திருக்க வேண்டும்‌.
  • பிளஸ்‌ 1, பிளஸ்‌ 2 மற்றும் கல்லூரி ஆகிய வகுப்புகளில்‌ ஏதேனும்‌ ஒன்றில்‌ படிப்பவராக இருக்க வேண்டும்..

Also Read: சிதம்பரம் அரசு பள்ளி மதிய உணவில் இருந்த பூரான் – 50  மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – போலீஸ் விசாரணை!

  • கல்லுரியில் படிக்கும் மாணவர்கள் கடைசியாக எழுதிய தேர்வில்‌ குறைந்த பட்சம்‌ 80 சதவீதம்‌ (சராசரி) மதிப்பெண்‌ பெற்றிருக்க வேண்டும்‌.
  • விண்ணப்பிக்கும் மாணவர்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும்‌ குறைவான வருட வருமானம்‌ உடைய குடும்பத்தைச்‌ சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *