RTE கல்வி உரிமை சட்டத்தின் கீழ் CBSE மற்றும் ICSE பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு. கட்டாய பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை சேர்க்க உத்தரவிட இயலாது என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
CBSE மற்றும் ICSE பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு
கட்டாய கல்வி உரிமை சட்டம் (RTE):
மத்திய அரசு பொருளாதார சூழலில் பின் தங்கிய மாணவ மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளில் RTE கீழ் 25% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இது பள்ளிகளில் இருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள மாணவர்கள் மட்டுமே இந்த RTE கீழ் சேர்க்கப்படுவர். 25 % இட ஒதுக்கீடுக்கும் அதிகமாக மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்தால் அவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நிராகரிப்பு:
தற்சமயம் இந்த ஒதுக்கீட்டின் கீழ் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கோவையை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !
அப்போது மனுதாரர் தரப்பில் ” 1 KM சுற்றளவுக்குள் வசிக்கும் வீடு என்று காரணம் கூறி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது தவறு. ஆந்திராவில் இது சம்பந்தமாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25 % இட ஒதுக்கீட்டில் C.B.S.E, I.C.S.E பள்ளிகளையும் சேர்க்க வேண்டும் ” என்று வாதிட்டது.
தமிழக அரசு விளக்கம்:
“தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மாநில அரசின் கட்டண நிர்ணய குழு கட்டணங்களை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில் 25 % இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு செலுத்துகிறது. ஆனால் C.B.S.E, I.C.S.E போன்ற பள்ளிகளில் மாநில அரசின் கட்டண நிர்ணய குழு கட்டணங்களை நிர்ணயிக்க இயலாது. அதனால் இந்த பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க உத்தரவிட இயலாது” என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
உத்தரவு:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை 18 ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் தமிழ்நாடு அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.