Home » செய்திகள் » புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு – நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை !

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு – நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை !

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு - நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை !

உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போது உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயை குணப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசி பல ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் அளித்த பேட்டியில், ‘புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக mRNA அடிப்படையிலான அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்

மேலும் பரிசோதனைகளின்போது, இந்த தடுப்பூசியானது சிறப்பாக செயல்பட்டு புற்றுநோய் வளர்ச்சி மற்றும் புற்றுநோய் பரவுவதை தடுத்ததாக கமலேயா தேசிய ஆராய்ச்சி மைய இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் கூறியுள்ளார். Russia announced developed cancer vaccine

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top