உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் நோய் தான் கேன்சர். பெரும்பாலான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். உலகில் எல்லா நோய்களுக்கும் குணப்படுத்தும் முறைகளை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட வியாதிகளுக்கு தான் தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதற்கான முயற்சியில் பல நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். அந்த வகையில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் அதீத தீவிரம் காட்டி வந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் கேன்சருக்கான தடுப்பூசி-களை உருவாக்குவதில் கடைசி கட்ட ஆய்வில் இருப்பதாகவும் விரைவில் இது நோயாளிகளுக்கு கிடைக்கும் என்றும் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கேன்சர் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை இப்பொழுது நாங்கள் உருவாக்கி உள்ள நிலையில், அதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். எனவே புற்று நோய்க்கான தடுப்பூசி விரைவில் மக்களுக்கு கிடைக்கும், என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.