கமலா ஹாரிஸுக்கு ரஷ்ய அதிபர் புடின் ஆதரவு - என்ன காரணம் தெரியுமா ?கமலா ஹாரிஸுக்கு ரஷ்ய அதிபர் புடின் ஆதரவு - என்ன காரணம் தெரியுமா ?

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு ரஷ்ய அதிபர் புடின் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவிற்கு எதிரான செயல்களை கமலா ஹாரிஸ் செய்ய மாட்டார் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

அத்துடன் இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்கிய தற்போதைய அதிபர் ஜோபைடன் போட்டியலிருந்து விலகியதை தொடர்ந்து துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கமலா ஹாரிசுக்கு சாதமாக வரும் நிலையில் தற்போது ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து வோலடிவோஸ்டாக்கில் நடந்த கருத்தரங்கில் பேசிய புடின் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் விலகி கமலா ஹாரிஸை ஆதரித்தார். மேலும் இது அவர் எடுத்த சரியான முடிவாக நான் கருதுகிறேன் என்றும், Russian President Vladimir Putin

அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியல் – 2வது இடத்தில் நடிகர் விஜய் !

இதனையடுத்து கமலா ஹாரிசின் வசீககரமான புன்சிரிப்பே அவருக்கு எல்லாம் நடந்து விடும் என முடிவுக்கு வந்துவிடலாம்.

அத்துடன் ரஷ்யாவிற்கு எதிரான செயல்களை கமலா ஹாரிஸ் செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன். இருப்பினும் இத்தேர்தலில் யார் அதிபராக வர வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்வார்கள் என அவர் தெரிவித்தார். US presidential candidate Kamala Harris

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *