கேரளாவில் நடைபெற்ற ரஷிய அதிபர் தேர்தல் ! வாக்குச்சாவடியில் திரண்ட பொதுமக்கள் - உற்சாகமாக வாக்களித்தனர் !கேரளாவில் நடைபெற்ற ரஷிய அதிபர் தேர்தல் ! வாக்குச்சாவடியில் திரண்ட பொதுமக்கள் - உற்சாகமாக வாக்களித்தனர் !

கேரளாவில் நடைபெற்ற ரஷிய அதிபர் தேர்தல். ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில் வரும் மூன்று நாட்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷிய நகர்ப்பகுதிகள் மற்றும் ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் சென்று தங்கள் வாக்குகளை செலுத்துகின்றனர். மேலும் அதிபர் தேர்தல் என்பதால் கூடுதல் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வெளிநாட்டில் வாழும் ரஷிய மக்கள் வாக்களிக்கும் வகையில் ரஷிய தூதரகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்னஞ்சல் மூலமாகவும் மக்கள் வாக்களிக்கின்றனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ரஷிய துணை தூதரகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் கேரளாவில் நிரந்தரமாக தங்கியிருக்கும் ரஷிய மக்கள் மற்றும் சுற்றுலா வந்தவர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குப்பதிவு மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் திரளாக வந்த மக்கள் தங்களில் வாக்கினை பதிவு செய்தனர்.

மீண்டும் IPL தொடரில் களமிறங்கும் வீரர்கள் ! யார் யார் தெரியுமா ? – லிஸ்ட் இதோ !

மேலும் ஒத்துழைப்பு அளித்த ரஷிய குடிமக்களுக்கு ரஷியாவின் கவுரவ தூதரும், ரஷிய இல்லத்தின் இயக்குநருமான ரதீஷ் நாயர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ரஷிய அதிபர் தேர்தலுக்காக மூன்றாவது முறை கேரளாவில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *