ருத்ராட்சம் மாலை பயன்கள். சிவனுடைய கண்களின் அம்சமாக நாம் பார்க்கிறோம். இந்த ருத்திராட்ச மரத்தை ஒரு தெய்வீக விருட்சம் என்று கூறுவர். அம்மரத்து பழத்தின் உள்ளிருக்கும் விதையே இந்த ருத்ராட்சம் ஆகும். இது ஒரு மதத்தின் அடையாளம் என்று மட்டுமில்லாமல் இதை அணிவதால் நமது உடலில் பல்வேறு மாற்றங்களை நாம் பார்க்க முடியும்.
ருத்ராட்சம் மாலை பயன்கள்
நன்மைகள்:
பொதுவாக இந்த ருத்ராட்சம் அணிவதால் நமது மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் உண்டாகும். இந்த ருத்ராட்சம் அணிந்து கொண்டு நாம் குளிக்கும் போது ஒவ்வொரு நாளும் கங்கையில் குளித்த பலனை நமக்கு தருகிறது. மேலும் அதிக மனஅழுத்தம், டென்ஷனால் வரும் அதிக கோபம் , சக்கரை நோய் , புற்று நோய் போன்ற பல்வேறு நோய்களை போக்கும் தன்மை இந்த ருத்ராட்சத்திற்கு உண்டு. இது மனஅமைதியை ஏற்படுத்தி மனதை சமநிலை படுத்துகிறது.
மனிதனின் உள்ளுணர்வு தன்மையை மேம்படுத்துகிறது. இதனால் நாம் சரியான முடிவுகளை எடுக்க வழிவகை செய்கிறது. குழந்தைகள் இந்த ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் ஞாபக சக்தி வளரும். படிப்பில் நுண்ணறிவு, ஞானம் போன்றவை வளரும். பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் இந்த ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் உடல் வலிமை பெறும். மனதும் சமநிலை படும். இத்தனை பலன்கள் கொண்ட ருத்ராட்சத்திற்கு 1 முதல் 14 முகங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
ருத்ராட்ச முகங்கள்
ஏக முக ருத்ராட்சம்:
‘சிவன்’ இந்த ஏக முக ருத்ராட்சத்தை கண்ணால் காண்பதே பெரும் பாக்கியம். இதை அணிந்தவறை எவ்வித எதிர்பாலும் வெற்றி கொள்ளமுடியாது. இதை அணிந்தால் பிரம்மகத்தி தோஷம் முதல் எல்லாவித தோஷங்களும் நிவர்த்தியாகும்.
இருமுக ருத்ராட்சம்:
இதற்கு ‘ஹர சவுரி’ என்று பெயர். ஹோகத்தி போன்ற தோஷங்கள் அகலும்.
மூன்று முக ருத்ராட்சம்:
இது ‘அக்னி முக ருத்ராட்சம்’ ஆகும். பருத்தி மூட்டையில் நெருப்பு பட்டால் எவ்வாறு பொசுங்கி விடுமோ அதே போல் இந்த ருத்ராட்சம் அணிவதால் நாம் மூன்று பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும்.
நான்கு முக ருத்ராட்சம்:
இதற்கு ‘தத்தாத்ரேயர் ‘என்று பெயர். இதை அணிந்தவர்களுக்கு மனிதனை கொன்ற பிரம்மஹத்தி நிவர்த்தியாகும்.
ஐந்து முக ருத்ராட்சம்:
இது ‘காலக்னி’ என்று அழைக்கப்படுகிறது. ஜீரணசக்தியை உண்டாக்கும். குடிப்பழக்கம் முதலிய செய்யத்தகாத விஷயங்களால் ஏற்பட்ட பாவங்கள் நீங்கும்.
மதுரை சித்திரை திருவிழா 2024 திருக்கல்யாணம் முதல் அழகர் ஆற்றில் இறங்கும் வரை முழு விபரம் உள்ளே !
ஆறு முக ருத்ராட்சம்:
இதை ‘ஷண்முக ருத்ராட்சம்’ என்று கூறுவர். இதனை அணிந்தால் கருவை அழித்த பாவம் போகும்.
ஏழு முக ருத்ராட்சம்:
‘ஆனந்த ருத்ராட்சம்’ என்பது இதன் பொருள். இதை அணிந்தவர்களுக்கு ஐஸ்வர்யம் நிலைக்கும்.
எண் முக ருத்ராட்சம்:
இதனை ‘விநாயகர் ருத்ராட்சம்’ என்று கூறுவர். பொய், களவு, சூது போன்ற பஞ்சமா பாதங்கள் செய்த பாவம் இதனை அணிவதால் குறையும்.
ஒன்பது முக ருத்ராட்சம்:
இது ‘ பைரவ ருத்ராட்சம்’ ஆகும். இதனை அணிந்தால் சிவலோக பதவி கிட்டும்.
பத்து முக ருத்ராட்சம்:
இதற்கு ‘விஷ்ணு ‘ என்று பெயர். இதை அணிவதால் பல்வேறு தோஷங்கள் நீங்கும்.
பதினோரு முக ருத்ராட்சம்:
‘ஏகாதச ருத்ராட்சம்’ என்பது இதன் பெயர்.இதை அணிந்தால் பல யாகங்கள் செய்த புண்ணியம் கிடைக்கும்.
பன்னிரண்டு முக ருத்ராட்சம்:
இதனை ‘அர்க்க ருத்ராட்சம்’ என்பர்.இதனை அணிந்தால் பல புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். நீராடும் தண்ணீரும் கூட இந்த ருத்ராட்சத்தால் புனிதம் அடையும்.
பதின்மூன்று முக ருத்ராட்சம்:
‘ காம ருத்ராட்சம்’ இதன் பெயர். இது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும். நினைத்தது நினைத்தபடி சித்திக்கும்.
பதினான்கு முக ருத்ராட்சம்:
இதற்கு ‘ஸ்ரீ கண்ட ருத்ராட்சம்’ என்று பெயர்.இதை அணிபவர்கள் தங்களின் குலத்திற்கு பெருமை சேர்ப்பார்கள்.