பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ் வி சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான எஸ் வி சேகர் கடந்த சில நாட்களாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் கடந்த 2018ல் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக கூறி எஸ் வி சேகர் மீது அதிரடி புகார் அளிக்கப்பட்டது.
எஸ் வி சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை.., என்ன காரணம் தெரியுமா?
இதனை தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது, இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும், 15,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
ஏர் இந்தியா விமானத்தில் முதல் முறையாக வைஃபை வசதி .., குஷியில் பயணிகள்!!
இந்த தீர்ப்பை எதிர்த்து, எஸ்.வி.சேகர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில், எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்தது. மேலும் இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தீவிரமாக பரவும் `ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று.., மருத்துவர்கள் எச்சரிக்கை!!
ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து.., வெளியான முக்கிய அறிவிப்பு!
அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025.., விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாட்டில் 2025 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ.., முழு விவரம் உள்ளே!!