
சமுத்திரக்கனி நடித்த சாட்டை படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் யுவன். இதை தொடர்ந்து சாட்டை உள்ளிட்ட 10 படங்களுக்கு மேல் நடித்த, இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். இந்நிலையில் அவர் ஒரு ஹோட்டலை நடத்தி வரும் நிலையில் புரோட்டா மாஸ்டராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, நான் இயக்குனர் பாலா படத்தில் நடிக்க கமிட்டானேன். என்னுடைய கதாபாத்திரம் ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் ஒருவனின் கேரக்டர் என்பதால் நாகூரில் இருந்த ஒரு உணவகத்தில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக வேலை பார்த்தேன்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

காலையில் 10 மணிக்கு உள்ளே என்று இரவு 12 மணிக்கு தான் வெளியே வருவேன். இந்த படத்திற்காக அவ்வளவு கஷ்டப்பட்டேன். கொஞ்சம் நாட்கள் கழித்து இந்த படம் தள்ளிப் போவதாக அறிவித்தனர். ஒரு கட்டத்தில் படமே முடிவுக்கு வந்தது என்று அவர்கள் கூற மூன்று வருடங்கள் அப்படியே போய் விட்டது. நானும் அப்படியே சினிமாவில் இருந்து விலகிட்டேன். இப்போது ஒரு ஹோட்டல் ஒன்றை நடத்தி நானே புரோட்டா மாஸ்டராக இருந்து வருகிறேன். அடுத்த படத்தில் நடிப்பேன் என்றால் எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.