ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு நடைபெறுவதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மேலும் வரும் 20 ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
சபரிமலை :
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து வரும் 20ஆம் தேதி வரை 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். இந்த காலக்கட்டத்தில் ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பகதர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம் என தேவசம் போர்டுஅறிவித்துள்ளது.
ஐயப்பன் கோவில் நடை திறப்பு :
அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதப்பிறப்பின் போதும் கோவில் நடை திறக்கப்பட்டு சில நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
இதனையடுத்து முக்கிய விழாக்களான மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் தொடர்ந்து 40 நாட்கள் நடை திறந்திருக்கும்.
அப்பொழுது நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழக்கம்.
இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
அத்துடன் கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறக்கிறார் என்றும் இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முன்பதிவு :
இதனையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை 16ஆம் தேதி முதல் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும்.
இதன் காரணமாக பக்தர்கள் நாளை முதல் வருகிற 20ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும்,
இந்த முறை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய விர்ச்சுவல் கியூ ஆர் கோடு மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சூரிய பெயர்ச்சி ஆடி மாத பலன்கள் 2024 – அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் மூன்று ராசியினர் – உங்க ராசி இருக்கா?
அத்துடன் கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் தினமும் அதிகாலை 5.20 மணி முதல் காலை 10 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து மாதாந்திர பூஜை முடிந்து வரும் 20ஆம் தேதி இரவு சபரிமலை கோவில் நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.