சபரிமலை பக்தர்களுக்கு விமானங்களில் சிறப்பு சலுகை: கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருவது தான் சபரிமலை ஐயப்பன் கோவில். இங்கு தினசரி ஏகப்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்கின்றனர்.
சபரிமலை பக்தர்களுக்கு விமானங்களில் சிறப்பு சலுகை
கேரள மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருக்கும் பக்தர்களும் தரிசனம் செய்து வருகின்றனர். எனவே வெளி மாநிலங்களில் உள்ள பகதர்கள், பேருந்து, ரயில் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தி சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பொதுவாக கேரள சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் பக்தர்கள் தாங்கள் கொண்டு செல்லும் இருமுடியில் உள்ள தேங்காய் விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
TVK மாநாட்டில் 5 ஆண்டுக்கு கொடி பறக்கணும் – விவசாயிடம் தவெகவினர் ஒப்பந்தம்!
இப்படி இருக்கையில் தற்போது தாங்கள் கொண்டு செல்லும் இருமுடிக்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான பாதுகாப்பு பணியாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர் – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!
தவெக மாநாட்டில் தமிழ்த்தாய்க்கு கட் அவுட் – முழு தகவல் இதோ !
2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள்
பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்