ஐயப்பன் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதும் சபரிமலையில் வருகிற டிசம்பர் 26ல் மண்டல பூஜை நடைபெற இருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Sabarimala Mandala Pooja:
கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தான் சபரிமலை ஐயப்பன் திருக்கோயில். கார்த்திகை மாதம் வந்தாலே போதும் பக்தர்கள் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து கோவிலுக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். கேரளாவை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் செல்கின்றனர். மேலும் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கிய மண்டல கால சீசன் நாளையுடன் முடிவடைய இருக்கிறது.
சபரிமலையில் டிசம்பர் 26ல் மண்டல பூஜை.., பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்!!
இதனை தொடர்ந்து, நாளை மதியம் மண்டல பூஜை நடைபெற இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. எனவே மண்டல பூஜையை முன்னிட்டு, திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி பவனி பம்பை நதி-க்கு கொண்டு வரப்படும். மேலும் இந்த தங்க அங்கி பவனி மாலை 3 மணி வரை பம்பை கணபதி கோவிலில் தரிசனத்திற்காக வைக்கப்படும்.
கஜகஸ்தானில் விமானம் வெடித்துச் சிதறியது.., 72 பேரின் நிலை என்ன?
இதனை தொடர்ந்து, அப்பாச்சி மேடு மற்றும் சரங்குத்தி பாதை வழியாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. சன்னிதானத்திற்கு வந்த அங்கியை ஐயப்பனுக்கு அணிந்து தீபாராதனை நடத்தப்படும். இந்நிலையில், தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது, மண்டல பூஜை நாளை நடைபெற இருக்கும் நிலையில் இன்று 50 ஆயிரம், நாளை 60 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இந்த 2 நாட்களிலும் புக்கிங் எண்ணிக்கை வரையறை படுத்தப்பட்டுள்ளது என்றும் தேவஸ்தானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!
திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?
தமிழகத்தில் நாளை (26.12.2024) முழு நேர மின்தடை பகுதிகளின் விவரம்! TANGEDCO வின் அதிகாரபூர்வ தகவல் !
எம்எஸ் தோனி மீது கொடுக்கப்பட்ட புகார்.., என்ன காரணம் தெரியுமா?
2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?.., தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!!