சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம். நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தரிசனத்திற்கு முன்பதிவு செய்வதை உடனடியாக நிறுத்த திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. வரலாறு காணாத வகையில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர்.
சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம்
தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில்களில் சபரிமலை கோவிலும் ஒன்று. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து தரிசனம் செய்ய வருவர். மற்ற மாதங்களை விடவும் இந்த கார்த்திகை, மார்கழி , தை போன்ற மாதங்களில் மாலை போடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
மக்களே இன்னும் நிவாரண தொகை வாங்கலையா? அப்ப இத முதல பண்ணுங்க.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்து பக்தர்கள் போன வருடம் முதல் மீண்டும் மாலை போட்டு விரதம் இருக்க தொடங்கினர். வரலாறு காணாத வகையில் வருடத்தின் முதல் நாளான நேற்று மற்றும் 1 லட்சம் பக்தர்கள் சபரி மலைக்கு தரிசனம் செய்ய வந்துள்ளனர்.இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் நேற்று ஆங்கே நிலவியது. இதனை பார்த்து மலைத்து போன கோவில் நிர்வாகம் முன்பதிவு செய்வதை உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது.
முன்பதிவு அல்லாமல் அங்கேயே ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்பவர்களும் உண்டு. இந்த ஸ்பாட் புக்கிங் முறையையும் வருகிற ஜனவரி 10 முதல் நிறுத்தப்படுவதாக திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது சபரி மலையில் வருகிற மகர ஜோதியின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எடுக்க பட்டதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.