Breaking News: சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு: கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தான் சபரிமலை ஐயப்பன் கோயில். இந்த கோவிலுக்கு கார்த்திகை மாதம் விரதம் இருந்து பெரும்பாலான பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். அதுமட்டுமின்றி சித்திரை விசு மற்றும் விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு
இதனை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் வர இருக்கும் நிலையில் தற்போது சபரிமலைக்கு போகும் பக்தர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வழியில் விபத்து மற்றும் உடல்நல குறைபாடு போன்றவைகள் தொடர்ந்து நேரிட்டு வருகிறது.
இதனால் பக்தர்கள் பெரிய வழி பாதைக்கு செல்வதை விட சின்ன வழி பாதையில் செல்லவே நாட்டம் காட்டி வருகின்றனர். இருப்பினும் ஐயப்பன் மீது அலாதி பக்தி கொண்ட பக்தர்கள் பெரிய வழி பாதையிலேயே செல்கின்றனர்.
இப்படி இருக்கையில் சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
தற்போது அதோடு சேர்த்து ரூ 10 (ஒரு முறை பிரீமியம்) கூடுதலாக செலுத்தி காப்பீடு பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அப்படி செலுத்தினால் யாத்திரையின் போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தால், அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். sabarimala
Also Read: திருவண்ணாமலை ஆடி மாத பவுர்ணமி 2024: கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
மேலும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இந்த காப்பீடு திட்டம் வருகிற மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்கான யாத்திரையின்போது அமலுக்கு வரும் என்று ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் வாரிய (டிடிபி) தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். sabarimala ayyappan
சூரிய பெயர்ச்சி ஆடி மாத பலன்கள் 2024
திருப்பதிக்கு போறீங்களா – அப்ப இதுக்கு அனுமதி இல்லை
ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024 !
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024