Home » செய்திகள் » சச்சின் டெண்டுல்கர் பாதுகாவலர் தற்கொலை – துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட சம்பவம் – ஏன் தெரியுமா?

சச்சின் டெண்டுல்கர் பாதுகாவலர் தற்கொலை – துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட சம்பவம் – ஏன் தெரியுமா?

சச்சின் டெண்டுல்கர் பாதுகாவலர் தற்கொலை - துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட சம்பவம் - ஏன் தெரியுமா?

சச்சின் டெண்டுல்கர் பாதுகாவலர் தற்கொலை: கிரிக்கெட் உலகில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒருவர் தான் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்த காரர். எப்பொழுதும் சச்சினுக்கு பாதுகாப்பாக இருந்து வருபவர் தான் மாநில ரிசர்வ் காவல் படையை சேர்ந்த ஜவான் பிரகாஷ் கப்டே. இந்நிலையில் தனது விடுமுறை நாட்களை கொண்டாட வேண்டும் என்பதற்காக ஜவான் பிரகாஷ் கப்டே தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜாம்நர் நகருக்கு சென்றிருந்தார்.

அப்போது அவருக்கு என்று அரசு கொடுக்கப்பட்ட துப்பாக்கியையும் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் எதற்கு இந்த முடிவை எடுத்தார் என்று போலீஸ் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. இறந்த காவலருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ஜவான் பிரகாஷ் கப்டேவின் உடலை தற்போது காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது இந்த செய்தி சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. சச்சின் டெண்டுல்கர் பாதுகாவலர் தற்கொலை

ராஜஸ்தானில் தாமிர சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து: ஒருவர் பலி –  14 பேர் உயிருடன் மீட்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top