Home » செய்திகள் » சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நிலை எப்படி இருக்கு?.., அவரே வெளியிட்ட முக்கிய வீடியோ?

சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நிலை எப்படி இருக்கு?.., அவரே வெளியிட்ட முக்கிய வீடியோ?

சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நிலை எப்படி இருக்கு?.., அவரே வெளியிட்ட முக்கிய வீடியோ?

சத்குரு ஜக்கி வாசுதேவ்

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தின் நிறுவனர் மற்றும் ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சில நாட்களுக்கு முன்பு தலை வலி அதிகமாக இருப்பதால் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருடைய மூளையில் நிறைய இரத்த கசிவு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவசரகால மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி முதல் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வரை கடவுளை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது இணையதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு அறுவை சிகிச்சை முடிந்த பிறகு  தற்போது அவர் மருத்துவமனையில் குணமடைந்து வருவதை தெரிவிக்கும் விதமாக செய்தித்தாள் ஒன்றை கையில் வைத்து, படித்தபடி இருக்கிறார். 19 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பின்னணி இசையுடன் விரைவில் குணமடையவும் என்ற ஹேஷ் டேக்குடன் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் குணமடைந்து வருகிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலினை பார்த்ததும் கதறி அழுத மூதாட்டி.., உடனே முதல்வர் செய்த காரியம்.., தூத்துக்குடியில் பரபரப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top