
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும் இயக்குனருமான வெற்றி துரைசாமி, தன்னுடைய நண்பர் கோபிநாத்துடன் ஹிமாச்சல பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்கு வாடகை கார் எடுத்து சுற்றி பார்த்து வந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி சட்லஜ் என்ற நதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக கார் கட்டப்பட்டு இழந்த நிலையில் நதிக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதை தொடர்ந்து காரை ஓட்டி வந்த டிரைவர் சடலமாக எடுக்கப்பட்ட நிலையில், கோபிநாத் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

ஆனால் வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கிடைக்காமல் இருந்த நிலையில் கிட்டத்தட்ட 8 நாட்களாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 9-வது நாளான இன்று விபத்து நடந்த பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 6 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரின் உடலை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கு முன்னர் அவரின் உடல் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அவரது குடும்பத்தினர் சார்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.