Home » செய்திகள் » சல்மான் கான் வீடு அருகே நடந்த துப்பாக்கி சூடு விவகாரம்: விசாரணையில் இருந்த நபர் தற்கொலை!!

சல்மான் கான் வீடு அருகே நடந்த துப்பாக்கி சூடு விவகாரம்: விசாரணையில் இருந்த நபர் தற்கொலை!!

சல்மான் கான் வீடு அருகே நடந்த துப்பாக்கி சூடு விவகாரம்: விசாரணையில் இருந்த நபர் தற்கொலை!!

சல்மான் கான் வீடு அருகே நடந்த துப்பாக்கி சூடு விவகாரம்: பாலிவுட் துறையில் முக்கிய  நடிகராக இருந்து வருபவர் தான் சல்மான் கான். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டைகர் 3 சூப்பர் ஹிட்  அடித்தது. தற்போது அவர் பிஸியாக நடித்து வரும் நிலையில், அவருடைய வீடு மும்பை பாந்த்ராவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி அன்று அதிகாலை 5  மணியளவில் சல்மான் கான் வீட்டுக்கு முன் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர்.

துப்பாக்கி சத்தத்தை கேட்டு பயந்து போன வாட்ச்மேன் வெளியே வந்து பார்த்த போது அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுள்ளனர். எனவே இது குறித்து சல்மான் கான் காவல்துறையிடம் புகார் கொடுத்த நிலையில், போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதனை தொடர்ந்து இது தொடர்பாக விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவரை காவல்துறை கைது செய்தனர்.

குக் வித் கோமாளி சீசன் 5ன் புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியை பார்த்துள்ளீர்களா? அழகிய புகைப்படம் இதோ!

அவர்களை விசாரித்த போது, பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அனுஜ் தாபன் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பதாக மும்பை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் விசாரணைக்காக மும்பை சிறப்பு பிரிவு போலீசாரின் காவலில் இருந்த அனுஜ்தாபன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதை தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அனுஜ்தாபன்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top