Home » சினிமா » பிக் பாஸ் ஷோவை ஹோஸ்ட் செய்த சமந்தா – இணையத்தை கலக்கும் வீடியோ!

பிக் பாஸ் ஷோவை ஹோஸ்ட் செய்த சமந்தா – இணையத்தை கலக்கும் வீடியோ!

பிக் பாஸ் ஷோவை ஹோஸ்ட் செய்த சமந்தா - இணையத்தை கலக்கும் வீடியோ!

பிக் பாஸ் ஷோவை ஹோஸ்ட் செய்த சமந்தா: சின்னத்திரையில் மிகவும் பேமஸான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஷோ தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கில் 8வது சீசன் நடைபெற்று வருகிறது. தமிழில் கடந்த ஏழு சீசனை கமல் ஹாசன் தொகுத்து வந்த நிலையில் அவருக்கு பதிலாக தற்போது 8வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் ஷோவை ஹோஸ்ட் செய்த சமந்தா

அதே போல் தெலுங்கு பிக்பாஸ் ஷோவை நாகர்ஜுனா ஹோஸ்ட் செய்து வருகிறார். தமிழில் கமலுக்கு முடியாமல் போன சமயத்தில் அவருக்கு பதிலாக சிம்பு, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் தொகுத்து வழங்கி வந்துள்ளனர்.

இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி – ஹீரோ யார் தெரியுமா?

அதே போல் நடிகை சமந்தாவும் தொகுத்து வழங்கியுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அட ஆமாங்க, தெலுங்கில் நாகர்ஜுனாவிற்கு பதிலாக நடிகை சமந்தா ஒரே ஒரு எபிசோடை தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top