சமத்துவ மக்கள்கட்சி சரத்குமார்
நாடாளுமன்ற தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் கொஞ்ச நாட்களில் தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கும் நிலையில், அதற்குள்ள இப்பொழுது இருந்தே கட்சிகள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். அதுமட்டுமின்றி கட்சிகள் கூட்டணி குறித்த விவாதம் தற்போது தான் சூடுபிடித்துள்ளது. நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், திமுக கட்சிக்கு ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாஜகவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக முன்னரே தெரிவித்திருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியை பாஜக கட்சியுடன் இணைக்க போவதாக அறிவித்துள்ளார். அதாவது சமத்துவ மக்கள் கட்சி என்று இனிமேல் ஒன்று கிடையாது. பாஜக கட்சியுடன் சேர்ந்து சரத்குமார் பணியாற்ற இருக்கிறார். அதை கேள்வி பட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் சரத்குமாருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த கட்சியில் பணியாற்றிய தங்களுடைய நிலைமை என்ன? என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த விஷயம் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.