சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி - வெளியான முக்கிய தகவல்!சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி - வெளியான முக்கிய தகவல்!

சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6ம் கட்டமாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் அருகே இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று இயங்கி வருகிறது.

சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 9ம் தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஊழியர்கள், ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்சங்க அங்கீகாரம் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செப் 9ம் தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அதாவது, இருங்காட்டுக் கோட்டையில் இருக்கும் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

உலகின் மிக அழகான ஆண்கள் பட்டியல் 2024  – முதலிடத்தை பிடித்த BTS-ன் வி (V)!

இந்த பேச்சுவார்த்தையில் சாம்சங் தொழிற்சாலை தரப்பு சார்பாக நிர்வாக ஆலோசகர் உள்பட 4 பேர் கலந்து கொண்டனர். இதுவரை 5 முறை பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது இன்று நடந்த 6ம் கட்டம் முத்தரப்பு பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில் மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது 

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அரசு அதிரடி அறிவிப்பு!

ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *