சனாதனம் விவகாரம்
கடந்த ஆண்டு கலைஞர் சங்கம் சார்பாக சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இருந்தார். அப்போது மேடையில் பேசிய அவர், “சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரான ஒன்று, நாட்டை உலுக்கி வரும் டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றவைகளை நாம் எப்படி எதிர்க்க முடியும் . ஒழிக்கத்தான் முடியும். அதே போல் தான் சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை’’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி அவர் மீது கர்நாடகா, உத்தர பிரதேசம், பிஹார், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் வழக்கு தொடர்ந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் பரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே இந்த வழக்கில் ஆஜராக கூறி நேற்று உதயநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், உதய நிதியோ அவர் தரப்பு வக்கீலோ ஆஜராகவில்லை. எனவே உதயநிதி நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்மனை போலீஸ் இணை கமிஷனர் மூலம் உதயநிதியிடம் நேரில் கொடுக்க வேண்டும் என்று, வழக்கை அடுத்த மாதம் தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.