சனாதனம் சர்ச்சை விவகாரம்
சென்னையில் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து பேசி சர்ச்சையை கிளப்பினார். இது குறித்து அவர் மீது மட்டுமின்றி சேகர் பாபு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் இந்த சர்ச்சை பெரிதாக போன நிலையில், அவர் மீது பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இந்த வழக்கு தொடர்பாக சில நாட்களுக்கு விசாரணைக்கு உதயநிதி ஆஜராகாததால் சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய நீதிபதி, ” சனாதன தர்மம் தொடர்பாக மூன்று பேரும் கூறிய கருத்துகள் தவறானது தான் என்று குறிப்பிட்டு, ஆனால் இந்த வழக்கில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற காரணத்தால் இந்து அறநிலையத்துறை இது போன்ற மாநாட்டில் கலந்து கொண்டிருக்க கூடாது என்று வழக்கை முடித்து வைத்தார். இதன் மூலம் அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.