சந்தேஷ்காலி விவகாரம்
மேற்கு வங்க மாநிலம் பகுதியில் இருக்கும் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி என்ற இடத்தில் நில அபகரிப்பு, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளான ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே பல பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஷாஜகான் ஷேக்கை பிடிக்க வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் வீடு உட்பட அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது தலைமறைவாக இருந்து வந்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் மாநில காவல்துறைக்கு திங்கட்கிழமை உத்தரவிட்ட நிலையில், கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து வந்த ஷாஜகான் ஷேக்கை காவல்துறை அதிரடியாக கைது செய்தது. இதனை தொடர்ந்து இன்று அவரை பாசிர் ஹாட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.