பாராளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரை அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்த சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் நீக்கம்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதன்படி ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை வருகிற ஜூன் 4ம் தேதி கணக்கிடப்பட இருப்பதாகவும். அப்போதே முடிவுகளை வெளியிட இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் தேதி அறிவித்த நிலையில் தற்போது அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் மக்களின் ஆதரவை பெற வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளியான மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கி வரும் சஞ்சய் நிருபம் சமீபத்தில், ” சிவசேனாவின் உத்தவ் அணியின் இத்தகைய செயல் மும்பையில் காங்கிரஸ் கட்சியை ஒழிக்கும் சதி. மும்பையின் வடக்கு தொகுதி பற்றி ஒரு வார காலத்திற்குள் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். இவரின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அவரை நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார். இப்பொழுது அவரை 6 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.