சர்தார் 2 ஷூட்டிங் போது உயிரிழந்த முக்கிய பிரபலம் - படப்பிடிப்பில் என்ன நடந்தது?சர்தார் 2 ஷூட்டிங் போது உயிரிழந்த முக்கிய பிரபலம் - படப்பிடிப்பில் என்ன நடந்தது?

Kollywood News: சர்தார் 2 ஷூட்டிங் போது உயிரிழந்த முக்கிய பிரபலம்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் கார்த்திக். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படுதோல்வி  அடைந்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த புது புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் கார்த்திக்.

மேலும் அவரது கெரியரில் மிக முக்கிய படங்களில் ஒன்றாக கடந்த ஆண்டு வெளியான சர்தார் திரைப்படம் விளங்கி வருகிறது. இதன் பார்ட் 2 எப்போது வரும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதுமட்டுமின்றி இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கி கொஞ்ச நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் ஒரு சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது, கார்த்திக் நடிக்கும் சர்தார் 2 படத்தின் ஷூட்டிங் போது எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்ட சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

Also Read: தனுஷின் ராயன் பட ட்ரைலர் வீடியோ வெளியீடு – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அப்போது அவரின் மார்பு பகுதியில் அதிகமான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவரின் நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *