Breaking News: இபிஎஸ்க்கு எதிராக சசிகலாவுடன் இணையும் ஓபிஎஸ்: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததில் இருந்து அதிமுக கட்சியில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகிறது. தெளிவாக சொல்ல போனால் கட்சியே இரண்டாக உடைந்து போனது. அதற்கு அப்புறம் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து பன்னீர்செல்வத்தை முழுமையாக விலக்கி வைத்தார். Paneer Selvam
ஆனால் எடப்பாடி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார். இதனால் பன்னீர்செல்வம் கட்சியில் சேர்க்க தொண்டர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கு EPS ஒரு போதும் செவி சாய்க்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதனால் OPS வருகிற சட்டமன்ற தேர்தலில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்று பலருடைய கேள்வியாக இருந்து வருகிறது. edapadi
இபிஎஸ்க்கு எதிராக சசிகலாவுடன் இணையும் ஓபிஎஸ்
தற்போது இது குறித்து முக்,இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பன்னீர் செல்வம் சசிகலாவுடன் கைகோர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பன்னீர்செல்வம் சென்னையில் எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் மாவட்ட செயலாளர்கள் முன்னணி நிர்வாகிகளின் கூட்டத்தை வருகிற ஜூலை 26ம் தேதி கூட்ட இருக்கிறார். admk party
Also Read: சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம் – எந்த வழக்குக்கு தெரியுமா?
அந்த கூட்டத்தில் OPS தனது அரசியலில் எதிர்காலம் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறாராம். மேலும் மீண்டும் எடப்பாடி யுடன் சேர்க்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதால் சசிகலாவுடன் கைகோர்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி முக்கிய முடிவுகளை அவர் எடுக்க இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. sasikala Tamil Nadu Assembly Election 2026
CSK கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 குறைவு
வேலை பார்க்கும் பெண்களுக்கு சூப்பர் திட்டம்