மலைக்கு செல்ல அனுமதி
சிவனுக்கு உகந்த நாளான (இன்று) மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிவனை நினைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உலக பிரசித்தி பெற்ற கோவிலான சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி சதுரகிரி மலையில் இருக்கும் இந்த சிவனுக்கு வரும் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு விசேஷ பூஜைகள் நடைபெற இருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் பக்தர்களுக்கு முக்கியமான செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது சதுரகிரி மலைப்பகுதியில் இருக்கும் சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க இன்று (மார்ச் 8) முதல் வரும் மார்ச் 11 ஆம் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சென்று வழிபட வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். மேலும் கோடை காலம் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் சூரியன் இப்போதே சுட்டெரிக்க தொடங்கி விட்டது. எனவே வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை மலைப்பகுதியில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.