Breaking News: சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தடை: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கோவில் தான் சதுரகிரி சுந்தரமகாலிங்கம். அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் மலையேறி சிவனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். சமீபத்தில் கூட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் வனத்துறையினர் யாரையும் மலையேற விடாமல் தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து ஆவணி மாத பிறப்பு மற்றும் சனி பிரதோஷம் வர இருக்கும் நிலையில் வருகிற ஆகஸ்ட் 19 (திங்கட்கிழமை) ஆவணி மாத பௌர்ணமி தினங்களை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று வழிபட இன்று(ஆகஸ்ட் 17) முதல் 20ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. weather report today
சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தடை
இந்நிலையில் சதுரகிரி மலையேறும் பக்தர்களுக்கு ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கடந்த சில நாட்களாக தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் நீரோடை பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. Sathuragiri sundara mahalingam temple
Also Read: சட்டமன்ற தேர்தல் 2024: காஷ்மீர்-ஹரியானா தேர்தல் தேதி அறிவிப்பு!!
குறிப்பாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேராமல் இருக்க நான்கு நாட்கள் வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். Sathuragiri Hills
இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான்
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை?