தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்தனர்.
சாத்தூர் அருகே அப்பைய நாயக்கன் பட்டியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம் போல் இன்று(ஜன. 4) ஊழியர்கள் வேலைக்கு சென்ற நிலையில் காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து.., 6 பேர் உயிரிழப்பு!!
இந்த விபத்தில் 4 அறைகள் தரைமட்டமாக்கியது. இது குறித்து மீட்புப்பணியினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து தற்போது தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த சிலர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் தீவிரமாக பரவும் HMPV வைரஸ்.., அறிகுறிகள் என்ன?.., எப்படி தடுக்கலாம்?
இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கி உள்ளார்களா என மீட்புப் பணி தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது காவல்துறையினருக்கும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசுக்கான வேதிப்பொருள் கலவையின் போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் அனுமதி.., என்ன ஆச்சு?.., அடுத்த கேப்டன் யார்?
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்.., ஒரு லட்சம் பிணைத்தொகை!!
2025 ஜனவரிக்குள் தவெக நிர்வாகிகள் நியமனம்.., பக்காவா காயை நகர்த்தும் தலைவர் விஜய்!!
பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து UKG மாணவி உயிரிழப்பு.., விக்கிரவாண்டியில் பரபரப்பு!!
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை.., எவ்வளவு தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!
ஜனவரி 13ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!