தற்போது சவுதிஅரேபியாவில் ஹஜ் புனிதப்பயணம் சென்ற 1300 பேர் பலி யாகி உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஹஜ் புனிதப்பயணம் சென்ற 1300 பேர் பலி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஹஜ் புனிதப்பயணம் :
மெக்காவுக்கு புனிதப்பயணம் செல்வதை இசுலாமியர்கள் தங்களின் வாழ்நாள் கடமையாக கருதுகின்றனர். தற்போது நடப்பாண்டில் உலகம் முழுவதிலும் இருந்து 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஹஜ் புனிதப்பயணம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெப்ப அலை :
தற்போது சவுதிஅரேபியாவில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான வெப்ப அலை நிலவுகிறது. அந்த வகையில் ஹஜ் புனிதப்பயணம் சென்றவர்களில் வெப்ப அலையை தாங்க முடியாமல் இதுவரை 1300 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,
கள்ளக்குறிச்சி விவகாரம் – பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு – நிக்காமல் கேட்கும் மரண ஓலம்!!
மேலும் அனுமதியின்றி வந்த 1.40 லட்சம் யாத்திரிகர்கள் உட்பட 5 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சவூதி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களில் 98 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.