சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார் - எதற்காக தெரியுமா?சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார் - எதற்காக தெரியுமா?

சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார்: தேனி மாவட்டத்தில் பதுங்கி இருந்த சவுக்கு சங்கரை கோவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் வந்த காரில் கஞ்சா இருப்பதை பார்த்த போலீஸ் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு உட்பட பல வழக்குகள் கீழ் பதிவு செய்யப்பட்டது. தற்போது கோவை சிறையில் இருந்து வரும் அவர் மீது மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது. அதாவது கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி மாவட்டம் ஸ்ரீமதியின் சாவு குறித்து அவதூறாக பேசியதாக கூறி தாயார் செல்வி புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், ” என்னுடைய மகள் மர்மமான முறையில் இறந்த போது சவுக்கு சங்கர் அவருடைய சவுக்கு மீடியா சேனலில் உண்மையை அவிழ்க்கும் சவுக்கு என்ற பெயரில் தனது மகளை பற்றியும், தனது குடும்பத்தை பற்றியும் அவர் உண்மை புறம்பாக பேசியிருந்தார். அப்போது அவரிடம் பேச என்னிடம் எந்த சாட்சியும் இல்லை. ஆனால் தற்போது சவுக்கு சங்கர் உதவியாளர் ஸ்ரீமதி விஷயத்தில் காசு வாங்கி தான் அப்படி பேசினார் என்று கூறியுள்ளார். எனவே அதன் அடிப்படையில் அவர் மீது புகார் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகார் குறித்து சைபர் கிரைம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக விரைவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

பிரதமர் மோடிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் – காவல்துறையினர் தீவிர விசாரணை!!

சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார் – savukku shankar news – ganja case – savukku media news – police case news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *