சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கு விவகாரம் - மதுரை நீதிமன்றத்தில் இன்று விசாரணை!சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கு விவகாரம் - மதுரை நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கு விவகாரம்: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அரசியல் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பேட்டி ஒன்றில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி தேனி மாவட்டத்தில் பதுங்கி இருந்த சவுக்கு சங்கரை கோவை காவல்துறை கைது செய்து கோவை ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

மேலும் அங்கிருந்த கார் ஒன்றில் 3 கிலோவுக்கு மேல் கஞ்சா இருப்பதை பார்த்து, அவர் கஞ்சா பிசினஸ் செய்வதாக கூறி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து அடுக்கடுக்காக புகார்களை முன்வைத்து அவர் வெளியே வர முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி உயிரிழப்பு – ஈரானின் புதிய அதிபராக முகமது முக்பர் பதவியேற்பு!!

அதாவது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கிற்காக அவரை காவல்துறை மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி என்ன தீர்ப்பு கொடுக்க போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி சவுக்கு கேட்ட மாதிரி அவரை மதுரை ஜெயிலுக்கு மாற்றுவார்களா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.  சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கு விவகாரம் – savukku shankar ganja case judgement – savukku shankar latest news – savukku media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *