
சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் தேனி மாவட்டத்தில் வைத்து அவரை கோவை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதுமட்டுமின்றி அவர் மீது கஞ்சா வழக்கு உட்பட பலவேறு வழக்குகளில் கீழ் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். ஆனால் இப்பொழுது வரை அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட பாடில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கஞ்சா வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையில் சவுக்கு சங்கரை ஜூன் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணையின் போது காவல்துறையினர் தன்னை காயப்படுத்தவில்லை என்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் சவுக்கு சங்கருக்கு இப்போதைக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிபவர்களுக்கு “சேமநல நிதி திட்டம்” – ஆகஸ்ட் 1 முதல் அமல்!!
சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – savukku shankar news – savukku media – youtube – tamilnadu news
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
வாட்ஸ்அப்பில் புதிய வசதி – பயனர்கள் மகிழ்ச்சி!!