சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம் - எந்த வழக்குக்கு தெரியுமா?சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம் - எந்த வழக்குக்கு தெரியுமா?

Breaking News: சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம்: சவுக்கு யூடியூப் உரிமையாளர் சவுக்கு சங்கரை சமீபத்தில் பெண் காவலரை அவதூறாக பேசிய வழக்கில் திருச்சி போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அதுமட்டுமின்றி அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அவர் ஜாமீன் கோரியும் தற்போது வரை அவருக்கு கிடைக்கவில்லை.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவர் யூடியூபில் வேலை பார்த்த விக்னேஷ் என்பவரிடம் தங்களது நிறுவனம் தொடர்பாக விளம்பரம் போடுவதற்கு கிருஷ்ணன் என்பவர் சுமார் 7 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த காசை வாங்கிவிட்டு விக்னேஷ் எந்தவித ரெஸ்பான்ஸ் கொடுக்காமல் இருந்து வந்ததால், கிருஷ்ணன்  திரும்ப பணத்தை கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கோ விக்னேஷ் பணத்தை தர முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து கிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில்  விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதுமட்டுமின்றி அந்த யூடியூப் சேனலின் உரிமையாளரான சவுக்கு சங்கரையும் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

Also Read: நேபாளத்தில் டேக் ஆஃப் செய்த விமானம் விபத்து – 5 பேர் பலி – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

மேலும் இந்த வழக்கு கடந்த 9ஆம் தேதி கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி பரத்குமார் முன்னிலைக்கு வந்தது.

அப்போது இருவரையும் 4 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. savukku shankar youtube channel

இந்நிலையில் சவுக்கு சங்கர் தரப்பில் இந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கோரப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார். karur criminal court

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *