SBI வங்கி கிளெர்க் வேலைவாய்ப்பு 2023. பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வருகின்றது. இங்கு ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்கள் இந்தியா முழுவதும் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
SBI வங்கி கிளெர்க் வேலைவாய்ப்பு 2023 ! உடனே விண்ணப்பியுங்கள் !
அதன்படி கிளெர்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாக காணலாம்.
வங்கியின் பெயர் :
State Bank of India – SBI பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
ஜூனியர் அசோசியேட்ஸ் ( வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை ) JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
இந்தியா முழுவதும் 8773 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டும் 202 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.
கல்வித்தகுதி :
அரசின் அனுமதியுடன் இயங்கும் பல்கலைக்கழக்த்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் SBI வங்கியில் காலியாக இருக்கும் JUNIOR ASSOCIATES பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 ! டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
வயதுத்தகுதி :
SBI வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு 20 முதல் 28 வயதிற்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. SC / ST – 5 வயது
2. OBC – 3 வயது
3. PwBD – 10 முதல் 15 வயது வரை
4. முன்னாள் ராணுவத்தினர் – 3 வயது
5. விதவை – 7 வயது வரை தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
சம்பளம் :
ரூ. 19,900 முதல் தகுதியான SBI வங்கி காலிப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு 17.11.2023 முதல் 07.12.2023 வரை தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் மூலம் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
1. SC / ST / ESM / DESM / PwBD – கிடையாது
2. OBC / EWS / பொதுப்பிரிவினர் – ரூ.750
தேர்ந்தெடுக்கும் முறை :
1. Preliminary Examination – முதற்கட்ட தேர்வு
2. Main Examination – முதன்மை தேர்வு மூலம் SBI வங்கியில் காலியாக இருக்கும் ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.
தமிழ்நாட்டில் தேர்வு மொழி :
1. தமிழ்
2. ஆங்கிலம்
3. இந்தி ஆகிய மொழிகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வினை எழுதலாம்.
தேர்வு மதிப்பெண்கள் :
1. முதற்கட்ட தேர்வு – 100 மதிப்பெண்கள்
2. முதன்மை தேர்வு – 200 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும்.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் :
1. முதற்கட்ட தேர்வு – 27.12.2023
2. முதன்மை தேர்வு – 15.02.2023 அன்று தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.