நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் எஸ்.பி.ஐ ஆன்லைன் வங்கி சேவைகள் முடங்கியதால், வாடிக்கையாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
SBI வங்கி ஆன்லைன் சேவை
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்.பி.ஐ விளங்கி வருகிறது. நாடு முழுவதும் இந்த வங்கியின் கீழ் வாடிக்கையாளராக இருந்து வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர்களை தன்வசம் இழுக்க புது புது வசதிகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி SBI ஆன்லைன் பேமண்ட் மூலம் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் 12 மணி முதல் மாலை 3.30 வரை ஆன்லைன் பேங்கிங் சேவை செய்யப்படாதது என்று SBI நிர்வாகம் தங்களது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது இன்று ஏப்ரல் 1 என்பதால் பல்வேறு வங்கிகள் பழைய கணக்குகள் முடிக்கப்பட்டு புதிய கணக்குகள் தொடங்க படுவது வழக்கம். அந்த வகையில் SBI வங்கி செயல்பட்டு வருவதால் இன்று மதியம் 12 மணி முதல் மாலை 3.30 வரை ஆன்லைன் பேங்கிங் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மாலை 3.30க்கு பின்னர் வழக்கம் போல் ஆன்லைன் சேவை தொடங்கப்படும் என்று எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ஆன்லைன் பேங்கிங், யோனோ செயலி, யு.பி.ஐ சேவை சேவைகள் செயல்படாததால், வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.