SBI வங்கி வேலைவாய்ப்பு 2023. பாரத ஸ்டேட் வங்கி ( SBI Bank ) 1806ம் ஆண்டு முதல் மக்களுக்கு நிதி சேவையை வழங்கி வருகின்றது. இந்த வங்கியில் 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். அதன் படி SBI வங்கியில் சிறப்பு அதிகாரி நிலையில் வியாபார ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையம் காணலாம்.
SBI வங்கி வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! விண்ணப்பிக்க மறந்துராதீங்க !
நிறுவனத்தின் பெயர் :
பாரத ஸ்டேட் வங்கியில் ( SBI வங்கியில் ) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
சிறப்பு அதிகாரி நிலையில் வியாபார ஆய்வாளர் ( Business Analyst )பணியிடங்கள் SBI வங்கியில் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
ஒரு வியாபார ஆய்வாளர் பணியிடம் இவ்வங்கியில் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
அரசு அங்கீகரித்து உள்ள பல்கலைக்கழகத்தில் சந்தைபடுத்துதல் , நிர்வாகம் அல்லது நிதித்துறையில் டிப்ளமோ / முதுகலை பட்டம் MBA முடித்தவர்கள் வியாபார ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு 2023
தமிழ்நாடு TRB வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 1,15,700 வரையில் மாத ஊதியம் !
வயதுத்தகுதி :
21 வயது முதல் 27 வயது வரையில் SBI வங்கியில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுபவம் :
0 முதல் 2 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் இருப்பவர்கள் SBI வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடிவும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
21.10.2023 முதல் 10.11.2023 வரையில் வியாபார ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இணையதளத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக இருக்கும் வியாபார ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். வேலைவாய்ப்பு 2023
விண்ணப்பக்கட்டணம் :
பொதுப்பிரிவினர் ரூ. 750 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் SC / ST / PWBD பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க தேவையானவை :
1. விரிவான Resume
2. I’D
3. பிறப்பு சான்றிதழ்
4. PwBD சான்றிதழ்
5. கல்வி சான்றிதழ்
6. அனுபவ சான்றிதழ்
7. தற்போதைய பணியாளர் என்றால் கடைசி சம்பள விவரம்
8. NOC
9. சமீபத்திய புகைப்படம்
10. சுய கையொப்பம் இவைகளை PDF முறையில் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
SBI வங்கியில் காலியாக இருக்கும் வியாபார ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவர்.
முக்கிய குறிப்பு :
சரியான மற்றும் பயன்பாட்டில் இருக்கும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்படிவத்தில் நிரப்ப வேண்டும். ஏனென்றால் நேர்காணல் பற்றிய விவரங்கள் தகுதியான நபர்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது வங்கியின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் வழங்கப்படும்.