தற்போது சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சென்னை கிண்டியில் உள்ள மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
Scholarship Announcement for Unemployed Youth 2025
கல்வி தகுதி:
மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எஸ்.எஸ்.எல்.சி தோல்வி / எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி /எச்.எஸ்.சி / பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உதவி தொகை பெற தகுதியுள்ளவர்கள் விவரம்:
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை பெற சென்னை-32. கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம்.
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
இதனையடுத்து விண்ணப்பதாரர் 40 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
Also Read: தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு சமையல் உதவியாளர் வேலை 2025! நேரடி பணி நியமனம் அறிவிப்பு!
விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும் மற்றும் சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மேற்கண்ட கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதிவுடையவர் ஆவர். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பபடிவத்தினை சென்னை – 32. கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.
மேலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் சென்னை-32. கிண்டியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Scholarship Announcement for Unemployed Youth 2025 Important Links:
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |