தமிழகத்தில் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கான தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற ஏப்ரல் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மாணவர்களே குட் நியூஸ் – இந்த நாளில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
பொதுவாக ஏதேனும் விசேஷ பண்டிகைகளிலோ அல்லது கோவில் திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பொது விடுமுறை கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது புதுக்கோட்டை மாவட்ட குளத்தூர் தாலுகா நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 30ம் தேதி முதல் வருகிற ஏப்ரல் 9ம் தேதி வரை பங்குனி திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 8ம் தேதி திங்கட்கிழமை நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தேரோட்டத்தை பார்க்க அந்த மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும் வெளியூர் பக்கதர்களும் கலந்து கொண்டு தேரை இழுப்பார்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே மக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. கல்லூரி மற்றும் பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. மேலும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக ஏப்ரல் 13ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும், சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தேர்தல் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.