25 ஆயிரம் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த வழக்கு: அரசாங்கம் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளியில் உள்ள காலிப்பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த 2016ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரிய 5,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இந்த நியமனத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே இந்த நியமனம் செல்லாது என்று ஏப்ரல் 22 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி அந்த ஊழியர்கள் அனைவரும் தாங்கள் பெற்ற சம்பளத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கு நிரூபிக்கப்பட்டால் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு படி அரசு ஊழியர்கள் நடந்து கொள்ள வேண்டும். மேலும் தொடர்ந்து சிபிஐ விசாரித்து வரும். பணி நியமனம் பெற்றவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கட்டாய நடவடிக்கை எடுக்கப்படாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 25 ஆயிரம் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த வழக்கு