திருக்கணிதப்படி பார்த்தால் இன்று மார்ச் (29.3.25) கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். இதன் மூலமாக விருச்சிக ராசிக்கு 5-ம் இடத்தில் சனி அமர்ந்து பலன் தரப்போகிறார். இந்த சனிப் பெயர்ச்சியில், விருச்சிக ராசியினருக்கு ஓரளவு பணவரவு உண்டாகும். மேலும் விருச்சிக ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள்:
இன்று முதல் அர்த்தாஷ்டமச் சனி விலகுகிறது. எனவே, உங்களுக்கு பூர்வீகச் சொத்துப் பிரச்சனை இருந்தால் முடிவுக்கு வரும். நிலம், மனை சார்ந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே உங்களால இயன்ற அளவு பணத்தை சேமித்து வைப்பது நல்லது.
மாணவ மாணவியர்கள் கல்வியில் சிறந்தது விளங்குவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேறு உத்தியோகத்திற்கு செல்ல வேண்டாம்.
சுபச் செலவுகளுக்காக அதிக கடன் வாங்க கூடாது. சொந்த வீடு கட்டி முடித்து கிரகப்பிரவேசம் கோலாகலமாக செய்வீர்கள்.
கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் விலக கூடும். உடலில் உள்ள சங்கடங்கள் நீங்கும். கண்ணைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு சில சிக்கல்கள் வரக்கூடும். 2026- மே மாதத்திற்குப் பிறகு நன்மைகள் அரங்கேறும்.