சென்னை உள்பட 7 மாவட்டங்களில் `ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று தீவிரமாக பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், ஒரு சில பகுதிகளில் டைபாய்டு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில், ஸ்கரப் டைபஸ்’ என்ற பாக்டீரியா தொற்று சென்னை உள்பட 7 மாவட்டங்களில் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தீவிரமாக பரவும் `ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று.., மருத்துவர்கள் எச்சரிக்கை!!
இது தொடர்பாக வெளியான மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தற்போது மக்களிடையே பரவி வரும்ஸ்கரப் டைபஸ்’ என்ற பாக்டீரியா வகை ஒரு தொற்று நோயாகும். மேலும் இந்த பாக்டீரியா எப்படி உருவாகும் என்றால், பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும் பொழுது தான் இந்த நோய் மனிதர்களுக்கு ஏற்படுகிறது.
ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து.., வெளியான முக்கிய அறிவிப்பு!
இந்த நோய் மனிதர்களுக்கு ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் அரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த நோய் தற்போது தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் தான் அதிகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், விவசாயிகள், புதர் மண்டிய வனப்பகுதியில் இருக்கும் மக்கள், மலையில் வாழும் மக்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025.., விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாட்டில் 2025 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ.., முழு விவரம் உள்ளே!!
தமிழ்நாட்டில் நாளை (03.01.2025) மின்தடை பகுதிகள் விவரம்! TNEB வெளியிட்ட ஏரியாக்களின் லிஸ்ட் இதோ!
சென்னையில் இன்று(31.12.2024) சீமான் கைது.., என்ன காரணம் தெரியுமா?