செபி அமைப்பு பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை விதித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும், இயக்குனராகவோ அல்லது நிர்வாகத்திலோ அனில் அம்பானி இருக்கக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அனில் அம்பானி :
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானி. தற்போது இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து செபி அமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் முதலீட்டாளர்களின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் :
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
அவர்களில் மூத்த மகனான முகேஷ் அம்பானி, ஜியோ, ரிலையன்ஸ் பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளில் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மேலும் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியும் அவர் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அவரது தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக செயல்படுகின்றன.
ஆனால் அவரது இளைய சகோதரரான அனில் அம்பானியின் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக செயல்பாடு இல்லாமல் நஷ்டத்தில் மூழ்கி வருகின்றன. அதன் காரணமாக அவருக்கு மட்டுமல்லாமல் நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேலும் முதலீட்டாளர்களின் நிதியை அனில் அம்பானி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
இதன் அடிப்படையில் இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானியின் நிறுவனம் உள்ளிட்ட 24 நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து செபி அமைப்பு அறிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் கைது – என்ன நடந்தது?
ரூ.25 கோடி அபராதம் :
இதனை தொடர்ந்து தொழிலதிபர்களான சுதால்கருக்கு ரூ.26 கோடியும், பாப்னாவுக்கு ரூ.27 கோடியும், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதமும், மேலும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ.6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்குசந்தையில் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவன பங்குகளுக்கு 6 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும், இயக்குனராகவோ அல்லது நிர்வாகத்திலோ அனில் அம்பானி இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.