மறுமணம் செய்ய போறீங்களா. திருமணம் என்பது ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையில் ஒரு அழகிய தருணம் ஆகும். ஆனால் ஏனோ இந்த திருமணத்தால் சிலரது வாழ்க்கை வரமாகவும் சிலரது வாழ்க்கை சாபமாகவும் மாறுகிறது. பல்வேறு காரணங்களால் சிலருக்கு அவர்களது முதல் திருமணம் தோல்வியில் முடிகிறது. பின்னர் எதிர்காலத்தில் பாதுகாப்புக்காக ஒரு துணை வேண்டியும், தங்களது குழந்தையின் நலனை கருத்தில் கொண்டும் பல பெண்கள் தற்போது மறுமணம் செய்து கொள்கின்றனர். மறுமண வாழ்க்கையில் ஆண்களை விட பெண்களே அதிக சிக்கல்களை சந்திக்கின்றனர் என்று புள்ளிவிவரம் கூறுகிறது.இதை தவிர்ப்பதற்கும், மறுமணம் செய்து கொள்ளும் முன்பு பெண்கள் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
மறுமணம் செய்ய போறீங்களா
குழந்தைகள்:
மறுமணம் தங்களை மட்டும் சார்ந்தது இல்லை. முதல் திருமணத்தில் மூலம் பிறந்த குழந்தைகளும் இந்த மறுமண பந்தத்தில் இணைவர். புதிதாக வரும் துணைக்கு அந்த குழந்தையை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதில் சற்று தயக்கம் இருக்கலாம். குழந்தை தன்னுடைய பழைய பெற்றோரை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படலாம். இதனால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
விவாகரத்து ஆனபின்பு பல பெண்கள் தங்கள் முன்னாள் கணவர் தங்களது குழந்தைகளை சந்திக்க அனுமதிப்பது இல்லை. இதனால் அந்த குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். புதிய பெற்றோரை ஏற்று கொள்வதில் சில தயக்கங்கள் இருக்கும். இதற்கு ஆரம்பத்திலே தீர்வு காணாவிட்டால் சிக்கல்கள் ஏற்படும். எனவே, இந்த விஷயத்தில் தெளிவான முடிவை எடுப்பது அவசியமாகும்.
தெரியாத திருமண வீட்டில் சாப்பிட்டால் ரூ.500 அபராதம் ! பிடிபட்டால் 3 மாத சிறை – தெரியாத திருமணத்தில் சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு !
பொருளாதார பிரச்சனைகள்:
குடும்பத்தின் வரவு ,செலவுகளை தற்போது கணவன், மனைவி இருவருமே பகிர்ந்து கொள்கிறார்கள். தவணை முறையில் பொருட்கள் வாங்குவது, முதலீடு செய்வது போன்றவற்றை இருவரும் இணைந்தே செய்கின்றனர். விவாகரத்து ஏற்பட்ட பின்பு இது போன்ற பொருளாதார பிரச்சனைகளுக்கு பெண்கள் சிரமப்படுகிறார்கள். முதல் திருமணத்தில் இருந்து விலகும் போது பொருளாதார பிரச்சனைகள் பற்றி பேசி தீர்த்து கொள்ள வேண்டும்.
தவறுகளை திருத்திக்கொள்ளுதல்:
முதல் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததற்கு கணவன், மனைவி இருவர் பக்கமும் சில தவறுகள் இருக்கும். மறுமணம் செய்து கொள்ளப்போகும் நபர் அந்த தவறுகளை திருத்தி கொண்டு புதிய வாழ்க்கையில் இணையவேண்டும். அப்போது தான் அந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும்.
உளவியல் சார்ந்த பிரச்சனைகள்:
மறுமண வாழ்க்கையில் சந்தேக மனப்பான்மை, சுயநலம், சுதந்திரம் இல்லாத உணர்வு, தேவையற்ற பயம் போன்ற பல்வேறு உளவியல் ரீதியான பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். இதனால் பல விஷயங்களில் தவறான முடிவை எடுக்கிறார்கள். மறுமண வாழ்க்கையில் தனது வாழ்க்கை துணைக்கு அவருடைய முன்னாள் துணையுடன் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் இருவரின் வாழ்க்கையையும் மனரீதியாக பாதிக்கும். எனவே முதலிலே இதை பற்றி வெளிப்படையாக கேட்டு தெரிந்த பின்னர் மறுமண வாழ்க்கையில் இணைவது நல்லது.