Home » சினிமா » செல்வராகவன் படத்துல சந்தானம் ஹீரோவா? – First லுக் போஸ்டர் இதோ!!

செல்வராகவன் படத்துல சந்தானம் ஹீரோவா? – First லுக் போஸ்டர் இதோ!!

செல்வராகவன் படத்துல சந்தானம் ஹீரோவா? First லுக் போஸ்டர் இதோ!!

செல்வராகவன் படத்துல சந்தானம் ஹீரோவா: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக களமிறங்கிய தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக நடித்து வருபவர் தான் நடிகர் சந்தா1னம். கவுண்டமணிக்கு பிறகு கவுண்டர் கிங்காக கோலிவுட்டை கலக்கி வருகிறார்.

ஆனால் அவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக தில்லுக்கு துட்டு படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனை குவித்தது என்றே சொல்லலாம். அதுமட்டுமின்றி தற்போது கடைசியாக வெளியான DD ரிட்டர்ன்ஸ் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில்  சந்தானம் ஹீரோவாக நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது Kollywood சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் செல்வராகவன். இவர் இயக்கிய எல்லா திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டானவை.

Also Read : “மஞ்சும்மல் பாய்ஸ்” தயாரிப்பாளர் மீது புகார் – பொய்யான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் – கேரள தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!!

அந்த வகையில் இவர் காமெடி நடிகர் சந்தானத்தை ஹீரோவாக வைத்து எடுத்த திரைப்படம் தான் ‘மன்னவன் வந்தானடி’. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க கமிட்டாகி இருந்தார். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய கொஞ்ச நாட்களில் நிறுத்தப்பட்டது. ஆனால், ரசிகர்கள் மீண்டும் இப்படத்தை எதிர்பார்க்கின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

  1. comedy actor santhanam movies ↩︎

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top